வழுக்கை தலையிலும் முடி பிச்சிகிட்டு வளரணுமா? இந்த எண்ணெய் '5' துளிகள் போதும்
தற்போது பலருக்கும் சுற்றுச்சூழல் உணவுப்பழக்க வழக்கத்தால் அதிக முடி உதிர்வு காணப்படுகின்றது. இந்த பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இல்லாமல் செய்ய முடியும்.
health benefits: தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுட்டு பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே நெருங்காது
ஆனால் எல்லா பொருட்களும் நல்ல பலனை தரும் என சொல்ல முடியாது. இதற்கு காரணம் முடி உதிர்தல் குறிப்பிட்ட ஒரு பிரச்சனையால் வராது. அதை தடுப்பதற்கு பல பொருட்கள் காணப்படுகின்றது.
தலைக்கு எண்ணெய் வைப்பது முடி வளர்வதற்கு என்றால் அது முற்றிலும் தவறு. முடி வேர்கால்களை வலுப்பெற செய்து அதற்கு நல்ல நீரேற்றத்தை வழங்கி முடி வளர்வதற்கு உதவி மட்டுமே செய்கிறது.
இதற்கு நாம் எண்ணெய் தேர்வு செய்யும் போது சரியான எண்ணெய்யை சரியாக தேர்வு செய்ய வேண்டும். அப்படியான வழிமுறையை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ரோஸ்மேரி எண்ணெய்
முடி உதிர்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உள்ளது. சிலருக்கு ஹார்மோன் சீரற்று சுரக்கும் இது முடி உதிர காரணமாக அமைகிறது. இது தவிர போதிய ஊட்டச்சத்து இல்லாமை, தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை கூட முடி உதிர காரணங்களாக அமையும்.
உடலில் மிகவும் முக்கியமான இரும்புச்சத்து தாதுக்கள் வைட்டமின்கள் குறைவாக இருந்தால் அதிகமான முடி உதிர்வு ஏற்படும். பிசிஓடி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஹார்மோன் சமநிலையில் இல்லாத காரணத்தால் முடி விரைவில் உதிரத்தொடங்கும்.
இந்த முடி உதிர்விற்கு ரோஸ்மேரி எண்ணெய் சிறந்த தீர்ப்பளிக்கும். இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்து வந்தால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து புதிய முடிகள் வளர தொடர்கின்றன.
தலையில் உள்ள மயிர்கால்கள் செயல் இழந்து இருந்தால் அதை மறுபடியும் செயல்பட வைக்கும். இந்த எண்ணையால் பக்கவிளைவுகள் எதுவும் நம்மை அண்டாது. ரோஸ்மேரி எண்ணையில் இருக்கும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் பூஞ்சை, பாக்டீரியா ஆகியவற்றை எதிர்த்து போராட உதவும்.
இதனால் தலையில் பொடுகு என்பது இருக்காது. இதை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது 10 நிமிடங்கள் மசாஜ் செய்தால் போதும். இதனால் முடி உதிர்வு விரைவாக குறைக்கப்பட்டு தலையில் முடி வளர்ச்சி தடைபட்ட இடத்திலும் வளரத்தொடங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |