ஆரோக்கியமாக இருக்கனும்னு நினைக்கிறீங்களா? காலையில் எழுந்ததும் இந்த விஷயங்களை செய்திடுங்க
ஆரோக்கியமாக இருப்பதற்கு காலையில் எழுந்து செய்ய வேண்டிய மிக முக்கிய ஐந்து விடயங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது மிகவும் பெரிய சவாலாக இருக்கின்றது. எப்பொழுதும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் சரியான உணவுப்பழக்கம் அவசியம் ஆகும்.
மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், கெட்ட பழக்கங்கள் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தில் பலரும் காணப்படுகிறார்கள்.
இதன் காரணமாக ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. ஆதலால் காலையில் சில விடயங்களை செய்தால் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.
என்ன செய்ய வேண்டும்?
காலையில் எழுந்து பல் துலக்கும் போது நாக்கை சுத்தம் செய்வதற்கு மறக்க வேண்டாம். அவ்வாறு சுத்தம் செய்தால் பாக்டீரியாக்கள் தங்காமலும், வாயில் துர்நாற்றம் அடிக்காமலும் இருக்கும். மேலும் சருமத்திற்கு பாதிப்பு வராமலும் பாதுகாக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சூர்ய ஒளியானது கார்டிசோல், மெலடோனின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த பெரிதும் உதவுகின்றது. முதுமையை தடுக்கவும், மன அழுத்தம் குறைந்து மனம் புத்துணர்ச்சியடையவும் செய்யும்.
காலையில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிலும் செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை குடித்தால் அதிக நன்மை பயக்கும். இதனால் நச்சுக்கள் வெளியேறுவதுடன், சருமத்தை பளபளப்பாகவும் வைக்க உதவுகின்றது. ஆதலால் காலையில் எழுந்ததும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் கட்டாயம் பருகவும்.
வயதான அறிகுறிகளை தடுப்பதற்கும், குறைப்பதற்கு காலையில் ஆரோக்கியமானதை சாப்பிட வேண்டும். ரத்த சர்க்கரை அளவை குறைத்து, சருமத்தை பளபளப்பாக்கும் பாதாமை காலையில் சாப்பிடலாம். இரவு நீரில் ஊற வைத்து காலை வெறும்வயிற்றில் சாப்பிடவும்.
காலையில் புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலே வயதான அறிகுறிகளை சுலபமாக குறைத்து விடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |