health benefits: தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுட்டு பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே நெருங்காது
பொதுவாகவே ஏலக்காய் இந்திய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கின்றது. அதன் தனித்துவமான சுவை மற்றும் மணம் காரணமாக சர்வதேச அளவில், ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது.
ஏலக்காய் மணம், சுவையை அளிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கின்றது.
தொன்று தொட்டு இந்திய சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஏலக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தினசரி இரண்டு ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகள் குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏலக்காயின் பயன்கள்
ஏலக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
தினசரி உணவில் ஏலக்காய் சேர்த்துக்கொண்டால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் துணைப்புரியும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் ஏலக்காய் வீரியத்துடன் செயல்படுகின்றது.
ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்பகள் தினசரி உணவில் ஏலக்காயை இரண்டு ஏலக்காய் சேர்த்துக்கொண்டாலே போதும் விரைவில் நோய் குணமாகும்.
இரவில் தூங்கும் முன்னர் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்று உப்புசம், வாயு, வயிற்று உபாதை போன்ற அசௌகரியங்களுக்கு தீர்வு கொடுக்கும்.
அதைவிட முக்கியமானது, தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்னர், குறைந்தது 2 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிடுட்டால் இரவில் நல்ல உறக்கம் ஏற்படும். குறட்டை பிரச்னையும் தீரும்.
மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் ஏலக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்தின்போது, வரும் சளி, இருமல், காய்ச்சலுக்கு ஏலக்காய் சிறந்த வீட்டு வைத்தியம் எனலாம்.
உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் நல்ல பலனை கொடுக்கின்றது.
வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன்னர் இரண்டு ஏலக்காயை வாயில் வைத்து தூங்குவது சிறந்த பலனை கொடுக்கும்
இது பாக்டீரியாக்களால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கி உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்குவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |