இந்த பேக் போடுங்க.. பொடுகு தொல்லை தீரும்!
பருவ கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது நம்மிள் பலருக்கும் வரும் பிரச்சினைகளில் ஒன்று தான் பொடுகு தொல்லை.
இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி உதிர்வும் அதிகமாக இருக்கும். பொடுகு பிரச்சனை எனக் கூறும் பொழுது பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் பலரும் நினைப்பது தலையின் சருமம் வறண்டு போயுள்ளது, அதனால் தான் பொடுகு தொல்லை என நினைக்கிறார்கள்.
அதற்காக அடிக்கடி எண்ணெய் வைப்பது, குளிப்பது போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். வறட்சி காரணமாக வரும் பொடுகு இப்படி செய்தால் சரியாகி விடும். அதே சமயம் வேறு காரணங்களால் வரும் பொடுகை இப்படி செய்தால் கட்டுப்படுத்த முடியாது.
தலையில் பொடுகு பிரச்சினையுள்ளவர்கள் உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சில பொருட்களை கொண்டு பேக் செய்து போடலாம். இதனால் அரிப்பு, அழற்சி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
அப்படியாயின், பொடுகு தொல்லையுள்ளவர்கள் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் எப்படி பொடுகை சரிச் செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. தயிர் பேக்
- தயிர் உடன் தேன் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
- அதன் பின்னர், பொடுகு பிரச்சினையுள்ளவர்கள் உங்கள் தலைக்கு படும்படி நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
- அந்த பேக்கை போட்டு சரியாக 30 நிமிடங்கள் ஊற விட்டு, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.
- இப்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்து வந்தால் பொடுகு பிரச்சினை தானாகவே குறைந்து விடும்.

2. க்ரீன் டீ பேக்
- க்ரீன் டீ உடன் புதினா எண்ணெய், வினிகர் ஹேர் மாஸ்க் ஆகிய பொருட்களை நன்றாக கலந்து விட்டு, தலைக்கு படும்படி நன்றாக தடவி, தலையில் ஊற வைக்க வேண்டும்.
- அதன் பின்னர், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
- அப்படி செய்து வந்தால் பொடுகு தொல்லை தடம் தெரியாமல் மறைந்து விடும்.

3. செம்பருத்தி பூ பேக்
- செம்பருத்தி பூவை வைத்து செய்யப்படும் இந்த பேக்கிறது வெந்தய நீர் சேர்த்து ஊற விட்டு நன்றாக அரைத்து அந்த கலவையை தலைக்கு போடலாம். அதனுடன் தேவை இருந்தால் கொஞ்சமாக தயிர் சேர்த்து கொள்ளலாம்.
- அதன் பின்னர் தலைக்கு படும்படி நன்றாக தடவி மசாஜ் செய்து விட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- இறுதியாக மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச விடவும்.
- இப்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்து வந்தால் பொடுகு பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும், தலைமுடி உதிர்வு கட்டுப்படுத்தப்படும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |