பணக்காரர் ஆக ஆசைப்படுறீங்களா? இந்த 7 விஷயம் ரொம்ப முக்கியம்
பணக்காரர் ஆவதற்கு நாம் செய்ய வேண்டிய சில காரியங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அனைத்து தரப்பு மனிதர்களிடையே இருந்து வருகின்றது. இதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் கஷ்டமாகவே நினைப்பார்கள்.
ஆனால் சில செயல்பளை நாம் அன்றாடம் செய்வதன் மூலம் நிச்சயம் பணக்காரர் ஆகிவிடலாம்.
பணக்காரர் ஆக வேண்டுமா?
தினசரி செலவுகளை கட்டாயம் செயலிலையோ, நோட்டிலோ குறித்து வைக்க வேண்டும். இவ்வாறு குறித்து வைத்த பின்பு தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.
உங்களது தினசரி மற்றும் மாத சம்பளத்தின் ஒரு பகுதியை ஏதாவது ஒன்றின் மூலம் சேமித்து வைத்தால் அவசரகால செலவுகளுக்கு நிச்சயமாகவே உதவும்.
தினமும் 15 நிமிடம் நிதி ரீதியாக எதையாகிலும் படிக்கவோ, கேட்கவோ செய்ய வேண்டும். தனிப்பட்ட நிதி மேலாண்மை, முதலீடுகள் குறித்து படிக்கலாம்.
தினமும் தேவையற்ற செல்வுகளை செய்யக்கூடாது என்ற எண்ணத்துடன் எழ வேண்டும். இவ்வாறு சின்ன சின்ன முடிவுகள் மிகப்பெரிய சேமிப்பை கொடுக்கின்றது.
குறுகிய கால நிதி இலக்கு, நீண்ட கால நிதி இலக்கு என்ன என்பதை தீர்மானிப்பதுடன், ஏன் சேமிக்கிறோம், ஏன் முதலீடு செய்கிறோம் என்பதை ஆலோசனை செய்ய வேண்டும். இவை நல்ல ஊக்கத்தை கொடுக்குமாம்.
ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால், அந்த பொருள் தேவைதானா என்பதை உங்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொள்ளுங்கள். அவ்வாறு தேவை என்று தோன்றினால், அந்த செலவை 24 மணி நேரத்திற்கு தள்ளிப்போடுங்கள்.
தினமும் ரூ.100 அல்லது உங்களது விருப்பத்திற்கு ஏற்ப தொகையினை நம்பகத்தன்மை வாய்ந்த இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். சேமித்தால் மட்டும் செல்வம் பெருகாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |