விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே இப்படியா? சைந்தவியின் கர்ப்பத்தை நம்ப மறுத்த ஜி.வி.பிரகாஷ்
சைந்தவி தான் கர்ப்பமானதை ஜி.வி.பிரகாஷிடம் கூறியதும் அவர் நம்ப மறுத்து மருத்துவரிடம் அழைத்து சென்றதை சைந்தவி முன்பு பேட்டி ஒன்றில் கூறியது தற்போது பேச்சு பொருளாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் ஜி.வி.பிரகாஷ். ஜென்டில் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை தனது மழலை குரலில் பாடியிருந்தார்.
பின்பு வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளரான இவர், அடுத்தடுத்து பாடல்களின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
பல முன்னணி பிரபலங்களின் படங்களில் இசையமைத்த இவர், நடிகராகவும் வலம் வந்தார். இவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை என்றாலும், டார்லிங் படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்த ஜி. வி. பிரகாஷ், சைந்தவி ஜோடி கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் தேதியன்று சென்னையில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு 2020ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பரஸ்பரமாக பிரிவதாக முடிவெடுத்து நேற்றைய தினத்தில் அறிக்கையை வெளியிட்டனர்.
கர்ப்பத்தை நம்ப மறுத்த ஜி.வி.பிரகாஷ்
சைந்தவி தான் கர்ப்பமானதை ஜி.வி.பிரகாஷிடம் கூறியது போது என்ன நடந்தது என்பதை முன்பு பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், தற்போது அது பேச்சு பொருளாக மாறியுள்ளது.
இந்த தம்பதிகளுக்கு 7 ஆண்டுகளுக்கு பின்பு அன்வி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. சைந்தவி கருவுற்ற தருணத்தினை ஜி.வி.பிரகாஷிடம் கூறிய போது அவர் கொடுத்த ரியாக்ஷனை விரிவாக கூறியிருந்தார்.
சைந்தவி அதிகாலையில் Pregnancy Card-ல் டெஸ்ட் செய்து பார்த்த போது, பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதனை கணவரிடம் காண்பித்த போது தெர்மாமீட்டரா என்று கேட்டதுடன், இதை ஏன் காலையிலேயே என்னிடம் காட்டுற என்று கேட்டாராம்.
Pregnancy Test கார்டு என்று கூறியதற்கு யாருடையது என்று கேட்டுள்ளார். அதற்கு சைந்தவி என்னோடது தான் பேபி ஃபார்ம் ஆகியிருக்குதுனு கூறியதைக் கேட்டு மீண்டும் பெட்ஷிட் எடுத்து இழுத்து போர்த்தி தூங்கியுள்ளார்.
பின்பு 11 மணிக்கு எழுந்து காலையில நீ எதுவும் சொன்னியா? ஏதோ கனவுல பேசுனது போல இருந்தது என்று கேட்டுள்ளார். மீண்டும் சைந்தவி அந்த கார்டை எடுத்து காட்டியபோதும் நம்பாத ஜி.வி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேப் செய்து பார்த்துள்ளார்.
அப்பொழுது மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையுடன் தான் நேரத்தை செலவிடுவார் என்று சைந்தவி கூறிய முந்தைய பேட்டியைக் கேட்ட ரசிகர்கள், குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளவில்லையா? என்று கேட்டு மனம் வருத்தமடைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |