சுகர் ஏறாமல் இருப்பதற்கு இந்த உணவு சாப்பிட்டால் போதும்! இனி கவலை வேண்டாம்
பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் எல்லோருக்கும் ஒரு தலைவலியாக இருக்கும் நோய் தான் சக்கரை வியாதி.
இதனால் சக்கரை நோயாளர்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதில் குழப்பத்தில் இருப்பார்கள். மேலும் நாம் உண்ணும் உணவின் படி குளுக்கோஸின் அளவு மாறுப்படுகிறது. இது சக்கரை நோயாளர்களுக்கு ஒரு பாதகமான விடயமாக அமைகிறது.
தொடர்ந்து நாம் குளுக்கோசு குறைவான உணவுகளை எடுத்து கொண்டோமானால் “குளுக்கோஸின் செறிவு” படிபடியாக உயரும். இதனால் இன்சுலின் அளவு குறைய ஆரம்பிக்கும், இப்படி நடந்தால் இரத்த சர்க்கரை அதிகரிப்பு ஏற்படும்.
அந்தவகையில் சக்கரை நோயாளர்கள் எப்படி உணவுகளை தினமும் எடுத்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் தெளிவாக பார்க்கலாம்.
சக்கரை ஏறாமல் தடுக்கும் உணவுகள்
1. பீன்ஸ்
சக்கரை வியாதியுள்ளவர்கள் பீன்ஸ் எடுத்து கொள்ளலாம் காரணம் என்ன தெரியுமா? பீன்ஸில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டு,புரதம் தாதுப் பொருட்கள் என பல ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
இதனால் பயமின்றி பீன்ஸ் எடுத்து கொள்ளலாம். மேலும் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பெண்ணும் குறைவாக தான் இருக்கிறது.
2. பழங்கள்
சக்கரை நோயாளர்கள் அதிகளவான பழங்கள் சாப்பிடக் கூடாது என கணிப்பை வைத்திருப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல இவர்களும் பழங்கள் சாப்பிடலாம், மேலும் அது பழத்தை பொருத்து தான் கணிப்பிட முடியும்.
இவ்வாறு வியாதியுள்ளவர்கள் சிட்ரஸ் பழங்கள் எடுத்து கொள்ளலாம். இதில் நார்ச்சத்துக்கள் கொழுப்பு மற்றும் புரதம் தான் அதிகம் இருக்கிறது.
3. பருப்புகள் மற்றும் விதைகள்
பொதுவாக பருப்புக்களில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் சக்கரை நோயாளர்கள் பருப்பு வகைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். மேலும் பருப்பு வகைகளில் வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
4. காய்கறிகள்
சக்கரை வியாதியுள்ளவர்கள் அடிக்கடி வைட்டமின் சி குறைபாட்டு நோய்களால் பாதிக்கப்படுவார்கள். கீரை, முட்டைக்கோஸ் மற்றும் அருகம்புல் போன்ற பச்சை காய்கறிகளை அதிகம் எடுத்து கொண்டால் காலப்போக்கில் வைட்டமின் சீ குறைப்பாடு பிரச்சினை இருக்காது. மேலும் மாவுச்சத்து கொண்ட காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
5.பூண்டு
சிலர் வாய்துர்நாற்றம் காரணமாக பூண்டை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் சக்கரை நோயாளர்களுக்கு இந்த பூண்டு அதிகம் உதவிச் செய்கிறது. காரணம் என்ன தெரியுமா? பூண்டு உடம்பிலுள்ள இன்ஸ்சுலின் அளவை குறைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இதனால் பூண்டை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.