இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை அவசியம் எடுத்துக்கோங்க
இன்று ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால் பலரும் இதய நோயினால் பாதிக்கப்படுவதுடன், மாரடைப்பினல் இறக்கவும் செய்கின்றனர்.
ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு சில காய்கறிகள் இதயத்தை வலுவாக வைத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். இங்கு ஆரோக்கியமான இதயத்திற்கு என்னென்ன காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகள்
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ள கீரை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றது. குறிப்பாக பசலைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
சத்தான காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் கந்தகம் உள்ளது. இவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.
காலிஃபிளவர் வகையைச் சேர்ந்த ப்ரோக்கோலியில் மெக்னீசியம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதயம் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்கின்றது.
வைட்டமின் கே சத்தைக்கள் கொண்ட தக்காளியை நாம் எடுத்துக் கொள்வதால், ரத்தத்தினை சுத்திகரிப்பதுடன், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.
பீட்ரூட் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி. தொடர்ந்து பீட்ரூட் சாறு உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.