ஒரே நொடியில் வாய் துர்நாற்றத்தை போக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்!
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பற்கள் இடையில் சிக்குவதால் வாய் துர்நாற்றம் என்பது ஏற்படுகிறது. இந்த வாய் துர்நாற்றத்தை சில தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் நீங்கலாம். அவை எப்படி என பார்க்கலாம்.
சோம்பு, சாப்பிடுவதற்கு முன்பாக வாயில் போட்டு மெல்ல வேண்டும் இதனால் துர்நாற்றம் வராது. ஜீரண சக்தியும் விரைவாக நடைபெறும். அடுத்ததாக... ஏலக்காய் அவ்வப்போது சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம் கட்டுப்படுத்த முடியும்.
சாப்பிட்ட பிறகோ அல்லது மற்ற சாதாரண நேரங்களில் ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறைந்து விடும்.
மேலும், பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து தொடர்ந்து கொப்பளித்து வந்தாலும் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறையும். வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய துளசியை எடுத்து வாயில் போட்டு மெதுவாக மென்று வர மெல்ல மெல்ல துர்நாற்றம் குறையும்.
உணவுக்கு பின்பு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொண்டால் துர்நாற்றம் வருவதை முற்றிலும் தடுக்கலாம் அல்லது ஆரஞ்சு பழத்தையும் சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொண்டால் துர்நாற்றம் வருவதை தடுக்கலாம்.
எலுமிச்சை சாப்பிடும் போது குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பற்களுக்கு சில பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.