குரு பெயர்ச்சி பலன்கள் ஜூன் 2026: கடக ராசிக்கு இது நடக்கும்! முழு பலன் இதோ
நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று சொல்லப்படும் குரு பகவான், வரும் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து உச்ச வீடான கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். முதல்வர் விஜய்யும் கடக ராசி தான்.

இந்த பெயர்ச்சி மற்ற ராசிகளை விட கடக ராசிக்காரர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசிக்குள் அவரின் சொந்த ராசிக்கு நுழைகிறார். இது மிகப்பெரிய ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஆனால், அந்த குரு பகவானே உங்கள் ராசிக்கு அதிபதியான சந்திரனின் வீட்டிற்கு வந்து, அங்கு அதீத பலத்துடன் உச்சம் பெற்று அமர்வது என்பது பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்.
நீங்கள் அனுபவித்த மன உளைச்சல்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உத்தியோக ரீதியான பின்னடைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக இந்த 2026 குரு பெயர்ச்சி அமையும்.

கடக ராசி
- எதையும் திட்டமிட்டுச் செயல்படும் குணமுடைய நபர்கள் தான் கடக ராசியினர். அவர்கள் வகுத்த திட்டங்களின் படி வெற்றிகளை அறுவடை செய்யப்போகும் ஆண்டாக 2026 அமையும்.
- இந்த குரு பெயர்ச்சியில் மிக முக்கியமான பலனாகக் கருதப்படுவது புத்திர பாக்கியம் ஆகும்.
- எனவே திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தைச் செல்வம் இல்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு, இந்த ஆண்டு மகப்பேறு உண்டாகப் பல வாய்ப்புக்களை குரு உருவாக்கி கொடுப்பார்.
- அதேபோல், திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்குத் தகுந்த வரன் அமைந்து மனம்போல மாங்கல்ய பாக்கியம் கைகூடும்.
- உங்கள் ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் இருக்கிறது இதனால் எதைச் செய்தாலும் அதில் ஒரு அதிர்ஷ்டமும், பாக்கியம் செய்தவர் என்று சொல்லத்தக்க முன்னேற்றங்களும் உண்டாகும்.
- மேலும், புத்தி ஸ்தானம் மற்றும் புகழ் ஸ்தானம் வலுவாக இருப்பதால், உங்கள் அறிவுத்திறன் வெளிப்பட்டுச் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
- உறவுகள் மற்றும் திருமண பந்தம் மிகவும் இனிமையாக இருக்கும்.
- பூர்வீகச் சொத்துக்கள் விஷயங்களில் உங்களுக்கு வரவேண்டிய உரிமைகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அவை இந்த பெயர்ச்சிக் காலத்தில் தடைகள் நீங்கி கையில் கிடைக்கும்.
- தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் கடக ராசியினருக்கு இது ஒரு பொற்காலமே. மேலும் பலனை முழுமையாக அறிய காணொளி பார்க்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |