வெளிநாட்டில் வேலை.. கடன்கள் தீர்ந்து யோகம் அடிக்கும்! குருப்பெயர்ச்சி பலன்கள் 2023
பொதுவாக ஜோதிடப்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகும். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு ராசியில் இருக்கக் கூடிய கால அளவு மாறுபடும்.
அந்தவகையில் குரு கிரகத்தின் கால அளவு 1 வருடம் தான். நவக்கிரகங்களில் தேவகுருவாக இருப்பவர் தான் குரு பகவான். இந்தக் குருபகவானின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்கப்போகின்றது என்று இன்று தெரிந்துக் கொள்ளலாம்.
மேஷ ராசி
மேஷ லக்னத்தை பக்ஷய ராசி என்று சொல்வார்கள். மேஷ ராசியில் பிறந்தவர்கள் குருப்பெயர்ச்சியில் அவர்களின் வேலையில் வேலை மாற்றம் ஏற்பட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பெற்று செல்வார்கள். முன்பை விட அதிகமாக சேமிக்க முயற்சி செய்வீர்கள். செயல்களிலும் நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷப ராசி
இந்தக் குருப் மாற்றம் உங்கள் வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரவிருக்கிறது. கட்டிமுடிக்காமல் பல காலமாக இருந்து வரும் வட்டிக் கடன்கள் அடைப்படும், தலைநகர்களுக்கு குடிப்பெயர வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். வைத்தியசாலை பிரச்சினைகள் கொஞ்சம் இருந்து வரும். உங்களுக்கு பணப்பிரச்சினை என்பது இல்லாமல் இருக்கும்.
மிதுன ராசி
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி யோகமான குருப்பெயர்ச்சியாக இருக்கும். தொழிலின் மூலம் நிறைய இலாபமடைவார்கள், பல பதவி உயர்வுகள் ஏற்படும், ஆன்மீக பலன்கள் அதிகம் இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.