அடிக்கப்போது கஜகேசரி ராஜயோகம் - வாழ்க்கை மாறப்போகும் ராசிக்காரர்கள் யார்?
குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்க உள்ளது.

குரு - சந்திரன்
ஜோதிடத்தில் ராஜயோகம், சுக்கிர யோகம், குருயோகம் என்று இருப்பது போல மிகவும் முக்கியமான யோகம் கஜகேசரி ராஜயோகம் ஆகும்.
இது வாழ்வில் மிகப்பெரிய ஏற்றத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கும். நேற்று (மே 19 - செவ்வாய்கிழமை) சந்திரன் மிதுன ராசியில் உள்ளது. ஏற்கனவே குரு அங்கே இருப்பதால் சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாக்கிறது.
இந்த ராஜயோகம் மேஷம் முதம் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் பலன்களை கொடுத்தாலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு இது அதிக பலனை கொடுக்கப்போகின்றது.

மிதுனம்
- இந்த அதிர்ஷ்டகரமான ராஜயோகம் மிதுன ராசியில்தான் உருவாகிறது. இதனால் உங்களுக்கு அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சாதகமான மாற்றங்கள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும். நிதியில் மேல்நோக்கி செல்வீர்கள்.
சிம்மம்
- இந்தக் கஜகேசரி யோகம், சிம்ம ராசிக்காரர்களுக்குத் திடீர் பண வரவை உண்டாக்கும். வெகு நாட்கள் பட்ட துன்பம் முடிவிற்கு வரும். பிடித்த வேலையில் நீங்கள் பணி செய்யலாம். தொழில் அல்லது வேலை விஷயமாக வெளியூர் பயணங்கள் செல்லவேண்டி ஏற்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எதில் மாற்றம் நினைத்தாலும் அதை சாதிப்பீர்கள்.
மீனம்
- மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த சுப யோகம் சகல வசதிகள், ஆடம்பரம் மற்றும் நிம்மதியை அதிகரிக்கும். நீண்ட நாள் பணப் பிரச்சனை முடிவிற்கு வரும். கிடைக்க வணெ்டிய பணம் கைக்கு வந்து சேரும். நல்ல வேலை ஆசைப்பட்டால் அது கிடைக்கும். தற்போதைய அலுவலகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். கல்வி மற்றும் அறிவு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பொன்னான நேரமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).