கால்பந்துடன் மூன்வாக் செய்து கின்னஸ்ஸில் இடம்பிடித்த இளைஞர்! மில்லியன் பேரை வாய்ப்பிளக்க செய்த காட்சி
கால்பந்தை தலையில் வைத்தவாறு கயானா இளைஞர் செய்த மூன்வாக் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற பாப் சிங்கர் மற்றும் டான்சரான மைக்கேல் ஜாக்சனின் டிரேட் மார்க் மூவ்களில் ஒன்று மூன்வாக்.
இந்திய அளவில் பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா, மூன்வாக்கை அசால்டாக செய்யக்கூடியவர். நடனத்துறையில் சாதிக்க விரும்பும் ஒவ்வொருவரும் மூன் வாக் நடனத்தை, ஒருமுறையாவது முயற்சி செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
இந்நிலையில், கயானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்வாக்கைக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கால்பந்தை தலையில் வைத்தவாறு அவர் செய்யும் மூன்வாக் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவரின் அசாத்திய திறமையை கின்னஸ் குழுவும் அங்கீகரித்துள்ளது.