வெடித்து சிதறும் எரிமலை... தீப்பிழம்பில் பீட்சா தயாரித்து அசத்தும் நபர்
அமெரிக்காவில் எரிமலை தீப்பிழம்பில் பீட்சா தயாரித்து கொடுக்கும் நபரின் காணொளி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த David Garcia என்ற நபரே இவ்வாறு வித்தியாசமான முறையில் பீட்சா தயாரித்து கொடுக்கின்றார்.
மத்திய அமெரிக்காவின் காட்டி மாலா பகுதியில் உள்ள Pacayo எரிமலை அவ்வப்போது தீப் பிழம்பை கக்கும். இதில் குறித்த நபர் பீட்சா தயாரித்து விற்பனை செய்துவரும் நிலையில், இதற்கான பிரத்தியேகமான பாத்திரம் ஒன்றினையும் வைத்துள்ளார்.
நாம் சாதாரணமாக தயாரிக்கப்படும் பீட்சாவை விட இவ்வாறு தயாரிக்கும் பீட்சாவை அதிகமாக விரும்பி வாங்கி சாப்பிடுவதாகவும், இதன் சுவை மிகவும் வித்தியாசமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அந்நபர் கூறுகையில், பலரும் நான் தயாரிக்கும் பீட்சாவை விரும்பி உண்கின்றனர். நான் இதற்காகப் பெரிதும் முயற்சிசெய்து புதியமுறை பீட்சாவை தயாரித்து வருவதோடு, இதற்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.