தப்பி தவறிக் கூட இந்த நோயுள்ளவர்கள் கிரீன் டீ குடிக்காதீங்க!
பொதுவாக எடையை குறைக்க வேண்டும் என முயற்சியில் இறங்குபவர்கள் அனைவரும் கண்டிப்பாக கிரீன் டீ குடிப்பார்கள்.
அமிர்தமாக இருந்தாலும் ஒரளவு தான் குடிக்க வேண்டும் என்பதற்கு கிரீன் டீ தான் ஒரு முக்கியமான உதாரணமாகும்.
எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு நாளை 3 அல்லது 4 வேளைகள் இந்த டீயை எடுத்து கொண்டால் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஏனெனின் இதிலுள்ள சில பதார்த்தங்கள் உடலுக்குள் சென்று காலப்போக்கில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.
அந்த வகையில் இந்த கிரீன் டீயை யாரெல்லாம் எடுத்து கொள்ளக் கூடாது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
இந்த நோய் இருந்தால் கிரீன் டீ குடிக்காதீங்க
1. கர்ப்பிணிகள்
கீரின் டீயில் காபின், காட்ஸின் மற்றும் டானின் ஆகிய பதார்த்தங்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றது. இது கர்ப்பிணிகளுக்கும் கருவிலுள்ள குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் குழந்தைகள் பிறந்தவர்கள் என்றால் அவர்களுக்கு சுரக்கும் பாலை கட்டுபடுத்தும். இதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.
இதனை தொடர்ந்து கீரின் டீயில் “காட்ஸின்” என்ற பதார்த்தம் இருக்கின்றது. இது உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கின்றது.
2. ரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள்
எடையை குறைக்கும் முயற்சியில் இறங்குபவர்கள் கிரீன் டீஎடுத்து கொள்ளும் போது ரத்த சோகை, இரும்புச்சத்து குறைபாடு ஆகியவற்றை சரியாக பரிசோதிக்க வேண்டும்.
இதனை கண்டுகொள்ளவில்லையென்றால் இதிலுள்ள “டானின்” என்ற பதார்த்தம் வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரித்து வயிற்று வலி, வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்சினைகளை உருவாக்கும்.
3. 2 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகள்
வீட்டில் காபித்தூள் முடிந்து விட்டது ஒரு நாள் தானே என்று குழந்தைகளுக்கு கிரீன் டீ கொடுக்க வேண்டாம்.
இதனால் குழந்தைகளுக்கு நிறைய பாதிப்புகள் இருக்கின்றன. மேலும் உள் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கின்றது. கண்களில் ஒரு வகை அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
4. கீழ்வரும் நோயுள்ளவர்கள்
இதனை தொடர்ந்து பதற்ற நோய் உள்ளவர்கள், ரத்தப்போக்கு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினை உள்ளிட்ட நோயுள்ளவர்கள் தப்பி தவறிக் கூட கீரின் டீயை எடுத்து கொள்ளாதீர்கள்.
உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் காலப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும்.