ஒருவாட்டி தேங்காய் சட்னி இப்படி செய்து பாருங்க...எல்லோருக்கும் பிடிக்கும்!
உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி தான் செய்வார்கள்.
வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி செய்தால் வீட்டிலுள்ளவர்களுக்கு சாப்பாடு மீது சலிப்பு உண்டாகி விடும்.
சில சமயங்களில் தேங்காய் சட்னியின் சுவையிலும் மாற்றம் ஏற்படலாம்.
தேங்காய் சட்னி தான் செய்ய வேண்டும் ஆனால் சுவையில் மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் அதில் சேர்க்கும் பொருட்களில் வித்தியாசப்படுத்தலாம்.
அந்த வகையில், வழக்கமாக செய்யும் தேங்காய் சட்னியை எப்படி வேறு சுவையில் கொடுக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 3
* பூண்டு - 2 பல்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
தேங்காய் சட்னி செய்முறை
முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை ஒரு கப் சேர்த்து, அதில் 1/2 கப் பொட்டுக்கடலை, 3 பச்சை மிளகாய், 3 சின்ன வெங்காயம், 2 பல் பூண்டு ஆகிய பொருட்களை ஒன்று பின் ஒன்று சேர்க்கவும்.
அதன்பின்னர், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, அதனுடன் புளி ஒரு சிறிய துண்டு மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் அரைத்து கொள்ளலாம்.
அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சற்று தாராளமாக நீரை ஊற்றி, தண்ணி சட்னி போன்று கலந்து கொள்ளலாம். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 வரமிளகாய் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
கடைசியாக தாளிப்பை சட்னிக்கு மேல் ஊற்றி கிளறி விட்டால் சுவையான க்ரீன் தேங்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
