பிரியாணி சாப்பிட்ட பின்பு மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! ரொம்பவே ஆபத்தாம்
பிரியாணி சாப்பிட்ட பின்பு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிரியாணி என்றாலே அசைவ பிரியர்களின் நாவில் எச்சில் தான் ஊறும். அந்த அளவிற்கு பிரியாணியை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
அசைவப்பிரியர்கள் உணவுப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பிரியாணியில் பல வகைகள் உள்ளது.
சிலர் பிரியாணியை தினமும் சாப்பிடுவார்கள். மேலும் சிலர் வார இறுதி நாட்களில் உணவை எடுத்துக் கொள்வார்கள்.
பிரியாணி சாப்பிட்ட பின்பு சில உணவுகள் சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன? என்பதையும், அதனால் ஏற்படும் பிரச்சனையையும் தெரிந்து கொள்வோம்.
குளிர் பானம்
பிரியாணி சாப்பிட்ட பின்பு குளிர்பானம் குடிப்பதை வழக்கமான பலரும் வைத்திருப்பார்கள். பிரியாணி சூடான உணவாகவும், கூல் ட்ரிங்க்ஸ் குளிர்ச்சியானதாகவும் இருப்பதால் உடலில் சேரும் போது வெப்பநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதுடன், அஜீரணம், வாயு, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் பிரச்சனையும் ஏற்படும்.
இனிப்புகள் மற்றும் ஐஸ்கிரீம்
அதே போன்று பிரியாணி சாப்பிட்ட பின்பு இனிப்பு, ஐஸ்கிரீம் இவற்றினை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை ஏற்படுவதுடன், பிரியாணியில் உள்ள கொழுப்பு பொருட்கள் உடலில் கொழுப்பாகவே மாறிவிடும்.
இந்த சமயத்தில் சர்க்கரை அதிகமாக உள்ள ஸ்வீட்ஸ் ஏதேனும் சாப்பிட்டால் அஜீரணத்திற்கு வழிவகுக்கும் மற்றும் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்
பழங்கள்
பிரியாணி சாப்பிட்ட பின்பு உடனே பழங்கள் மற்றும் பழச்சாறு சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரியாணி மசாலா பொருட்களும் பழங்களின் நார்ச்சத்து மற்றும் அமில பண்புகள் இணைவதால் செரிமான பிரச்சனை ஏற்படும். இதன் காரணமாக இரைப்பை பிரச்சனையும், அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
மில்க் ஷேக்குகள்
பிரியாணி சாப்பிட்ட உடனே மில்க் ஷேக்குகள் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். பிரியாணியில் இருக்கும் புரதங்கள் பாலுடன் கலக்கும் போது செரிமான பிரச்சனை ஏற்படுவதுடன், செரிமானமும் தாமதப்படும். இதனால் உணவு விஷமாக மாறுமாம்.
டீ, காபி
பிரியாணி சாப்பிட்ட பின்பு டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை தவிர்கக்வும். காஃபின் பிரியாணியில் இருக்கும் இரும்புச்சத்து உறிஞ்சுவதை குறைப்பதுடன், செரிமான அமைப்பில் அமிலத்தன்மையை அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
