47 வினாடிகளில் நறுக் நறுக்கென முடியை வெட்டி நபர் - இப்படி ஒரு உலக சாதனையா? வைரல் வீடியோ
இந்த பறந்து விரிந்த உலகில், தங்களின் திறன்களை சாதாரணமாக வெளிப்படுத்தி, பலர் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.
அதில், இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது முடிகளை வைத்து வகை வகையான டிசைன்களில் தங்களின் அழகை மேருகேற்றி கொள்கின்றனர்.
அந்த வகையில் , கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் முடி வெட்டுதலில் சாதனையை படைத்துள்ளார். அதன்படி, கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரை சேர்ந்த கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் என்பவர், ஒருவருக்கு குறைந்த வினாடிகளில் முடி வெட்டியுள்ளார்.

இதற்காக அவர், எடுத்துக்கொண்ட நேரம் 47.17 வினாடிகள். இவர் முடி வெட்டி முடித்ததும் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நீதிபதிகள், முடி வெட்டி கொண்டவரின் தலைமுடியின் நீளத்தை அளந்து, பின்னர் முறையாக பணி முடிந்து இருக்கிறது.
இதனை தொடர்ந்து கான்ஸ்டன்டினோசின் பெயர் கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்து கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும், கடைசியாக இதுபற்றிய வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு, விரைவாக முடி வெட்டி கொள்ள விரும்புகிறீர்களா? 45 வினாடிகளில் முடி வெட்டி கொள்ளலாம் வருகிறீர்களா? என அதற்கு தலைப்பும் பதிவிட்டுள்ளார்.
Need a quick trim? How about a 45 second trim? ?♂️ pic.twitter.com/DqeokLazg2
— Guinness World Records (@GWR) September 4, 2022