பூக்கத்தொடங்கும் செடிகளுக்கு இந்த உரத்தை போட்டால் காய்த்து குலுங்கும்: ஒரு முறை செய்ங்க
பூக்க தொடங்கும் செடிகளுக்கு இந்த பதிவில் கூறப்படும் உரத்தை போட்டால் எந்த வகையான செடியாய் இருப்பினும் காய்த்து குலுங்கும்.
இயற்கை உரம்
பொதுவாக செடிகள் செழித்து வளர உரம் சிறப்பாக தேவைப்படும். செடியை நடும் போது அதன் மண்ணிற்கு சிறந்த ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். இந்த ஊட்டச்சத்துக்களை வலுப்படுத்த இரசாயனமற்ற உரம் அவசியம்.
ஆனால் இப்போது யார் தான் இரசாயனத்தை நம்பி வாழாமல் இருக்கின்றனர். அனைத்து பொருட்களும் இரசாயம் தான். மக்கள் தங்களின் தேவை விரைவாக பூர்த்தியாக வேண்டும் என்பதற்காக இரசாயனத்தை நாடி செல்கின்றனர்.
ஆனால் இதனால் பயன் எதுவும் இல்லை. மாறாக பிரச்சனைகளே வரும். செடிகள் நன்றாக பூத்து குலுங்குகிறது ஆனால் காய்கள் மட்டும் வருவதில்லை.
இதற்கான காரணம் செடிகள் காய்ப்பதற்கு தேவையான இரசாயனமற்ற உரம் கிடைக்காததது தான். இதற்கு இயற்கை உரம் தயாரிக்க வேண்டும். இயற்கை உரத்திற்கு களை இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களை தண்ணீருடன் 1:4 விகிதத்தில் கலக்க வேண்டும்.
இதை ஒரு காற்று புகாத ஜாடி அல்லது வாளியில் சேமித்து வைக்கவும். 4-5 வாரங்களுக்கு ஒவ்வொரு சில நாட்களுக்கும் கலவையை அசைத்து விட வேண்டும். நான்கு வாரங்களின் பின்னர் களை டீ தயாரானதும், ஒரு துணி அல்லது காகித வடிகட்டியைப் பயன்படுத்தி கலவையை வடிகட்ட வேண்டும்.
இந்த டீ திரவ உரத்தை தாவரங்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன் இதை தண்ணீருடன் 1:10 விகிதத்தில் சமமாக கலவை செய்யவும்.
களைகளானது இலைகள் மற்றும் வேர்களுக்குள் வலுவான அளவு நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகியவற்றை கொண்டுள்ளன. இது செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கும். இதனால் செடிகள் காய்த்து கலுங்க உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |