நள்ளிரவில் நடந்த கூத்து! பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம்....ஜி.பி.முத்துவை சீண்டிய ராபர்ட் மாஸ்டர் - தீயாய் பரவும் வீடியோ
கட்டிலில் படுத்திருந்த ஜி.பி.முத்துவை ராபர்ட் மாஸ்டர் சீண்டிய வீடியோ சமூக வலைதளங்களி வெளியாகி அவரது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று மாலை தொடங்கியது.
இதில் 20 பேர் போட்டியாளராகக் களமிறங்கியுள்ளனர்.
என்னடா பன்னுரிங்க தலைவர ??#GPMuthu #GPMuthuArmy pic.twitter.com/hmU3cdfGxL
— GP முத்து ஆர்மி ? (@GP_MuthuArmy) October 10, 2022
ஜி.பி.முத்துவை சீண்டிய ராபர்ட் மாஸ்டர்
இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி.பி.முத்து உள்ளார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாக மாறியுள்ளன.
இந்நிலையில் தலையோடு போர்த்திக் கொண்டு ஜி.பி.முத்து கட்டிலில் படுத்திருக்க, ராபர்ட் மாஸ்டர் மெல்ல அவரின் கால்களை நோண்டுகிறார். இதனால் பயந்து போன, ஜி.பி.முத்து கட்டிலில் இருந்து கீழே விழுந்து திருதிருவென முழிக்கிறார்.
இதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கிறார்கள். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஜி.பி.முத்து ஆர்மி, ’என்னடா பண்றீங்க தலைவரை?’ என கொந்தளித்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யமா?
இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் நேற்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்கின் விதிமுறையின்படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய நால்வர் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள்.
இரவு முழுவதும் தூங்காமல், கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதே சமையம் வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நன்றாக உறங்கி கொண்டிருந்தார்கள். ஆனால் அதில் ரச்சிதா மட்டும் சீக்கிரமாகவே எழுந்துவிட்டார்.

வெளியே வந்த ரச்சிதாவிடம் வெளியே படுத்திருந்த நான்கு பெரும், ஏன் இவ்வளவு சீக்கிரமாக எழுந்துவிட்டீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்க்கு ரச்சிதா என்னால் தூங்க முடியவில்லை, தூங்கும் பொழுது தீடீரென சத்தங்கள் வருகிறது.
ஜி.பி. முத்து அண்ணா சிரிப்பது போல் சத்தம் கேட்டது. எழுந்து பார்த்தேன், அவர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அதே போல் மற்றவர்களின் சத்தமும் கேட்டது. மீண்டும் எழுந்து பார்த்தேன் அனைவரும் தூங்கி கொண்டு தான் இருந்தார்கள். இதனால் தான் என்னால் நன்றாக தூங்க முடியவில்லை. என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று செய்திகள் ஊடகங்களில் உலா வரும் நிலையில் ரச்சிதா இப்படி கூறியுள்ளது அனைவரின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.