Gpay, Phonepe பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத் தான்
கூகுள் மற்றும் போன் பே போன்ற செயலிகள் மூலம் பணம் அனுப்பும் தொகையில் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பே
கூகுள் பே என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு செயலி ஆகும். இந்த செயலி மூலம் உங்களது வங்கிக் கணக்கை இதனுடன் இணைத்துக் கொண்டால் போதும். அமர்ந்த இடத்திலேயே மற்றவர்களுக்கு பணம் அனுப்பி விடலாம்.
செல்லிடத் தொலைபேசி, ஆண்ட்ராய்டு, கைக் கணினி போன்ற கருவிகளின் வலைத்தளம் வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் இது பயன்படுகிறது.
இதனால் சில்லறை பிரச்சனைகளை வாடிக்கையாளர்கள் சந்திக்காமல் நேரத்தை மிச்சப்படுத்தவும் செய்கின்றனர். கூகுளில் நீங்கள் செய்யும் பணபரிவர்த்தனையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பணபரிவர்த்தனை
போன் பே, கூகுள் பே போன்ற யு.பி.ஐ செயலிகள் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய்வரை பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரி செலுத்துவதற்காக நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை யு.பி.ஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
பெரும்பாலான இதர வகை பணப் பரிவர்த்னைகளுக்கான உச்ச வரம்பு, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாயாக தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு சந்தை, காப்பீடு, வெளிநாட்டில் இருந்து பணம் பெறுதல் போன்ற சில பிரிவுகளுக்கு மட்டும் இந்த உச்ச வரம்பு 2 லட்சம் ரூபாயாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |