மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிபி முத்து: தலைவருக்கு என்னாச்சு என பதறும் ரசிகர்கள்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அனைவரையும் குஸிப்படுத்தும் ஜி.பி.முத்து வைத்தியசாலையில் இருப்பது போல இருக்கும் புகைப்ப்படம் தற்போது அவரின் ரசிகர்களை கவலையடைய வைத்திருக்கிறது.
மருத்துவமனையில் ஜி.பி.முத்து
சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார்.
போட்டியில் ஒரு வாரம் மட்டுமே கலந்து கொண்டிருந்தாலும் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார், இவர் கடிதத்தை படித்து கமெண்ட் சொல்லும் வீடியோ தான் இளைஞர்களை அதிகம் விரும்பி பார்ப்பார்கள்.
இதனாலே இவருக்கு பெரிய பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் குத் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாகவும் கலந்து கொண்டு வரும் ஜி பி முத்து தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.