ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் எத்தனை நாள் இருப்பார் தெரியுமா? ஒரே ஒரு போட்டியாளரை வெறுக்க காரணம் என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான ப்ரொமோ காட்சியில் இதுவரை யாருடைய கதையையும் நிராகரிக்காத ஜிபி முத்து ஆயிஷாவின் கதையை நிராகரித்தது போன்று வெளியாகியுளளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதிலும் ஜிபி முத்துவிற்கு தான் அதிக அளவில் மக்களிடையே வரவேற்பு இருந்து வருகின்றது.
21 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. ஆனால் ஜிபி முத்து தனது குடும்பத்தை பிரிந்து இருக்கமுடியவில்லை என்று பிக்பாஸிடம் கதறிய பின்பு 20 நாட்கள் மட்டும் இருப்பதாக தன்னைத் தானே சமாதானப்படுத்தியுள்ளார்.
இன்றைய ப்ரொமோ
இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் ஆறு போட்டியாளர்கள் தங்கள் கதையை கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அதனை ஆரம்பிக்கும் முன்பே சக போட்டியாளர்கள் குறித்த கதையை நிராகரித்து விடுகின்றனர்.
அதிலும் ஜிபி முத்து மற்றவர்களின் கதையை இதுவரை நிராகரிக்காமல் இருந்து வந்த நிலையில், ஆயிஷா கதை கூறும் போது பசரை அழுத்தி நிராகரித்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது.