பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் கெத்து காட்டிய ஜிபி முத்து! பொறாமையில் பொங்கும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்கில் போட்டியாளர்களிடையே கடும் பொறாமை மற்றும் போட்டி நிகழ்ந்து வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி பிரபல ரிவியில் ஆரம்பிக்கப்பட்டது. 20 போட்டிாளர்களுடன் ஆரம்பித்த நிலையில், பின்பு மைனா நந்தினி வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றார்.
இந்த வாரம் மொத்தம் 14 போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது.
ஜிபி முத்து வீட்டின் முதல் தலைவராக உள்ள நிலையில், தற்போது நடந்து வரும் டாஸ்கில் சக போட்டியாளர்களின் கதையை கேட்பதற்கு யாரும் தயாராக இல்லாமல் வஞ்சத்துடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் ஜிபி முத்து மட்டும் யாருடைய கதையையும் நிராகரிக்க பசரை அழுத்தாமல் இருந்து ரசிகர்களிடையே கெத்து காட்டி வருகின்றார்.