2026 இந்த ராசிகளுக்கு அரசு வேலை உறுதி! உங்க ராசி இருக்கா பாருங்க?
அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களில் யார் யாருக்கு இந்த ஆண்டு ஜோதிடரீதியாக வாய்ப்புகள் அமையும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

2026இல் அரசு வேலை உறுதி
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருக்கு நிரந்தரமான உத்தியோகம் மற்றும் அதிகாரமிக்க அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் எனில், ஜாதகத்தில் பத்தாம் இடமான ஜீவன ஸ்தானம் மற்றும் ஆறாம் இடமான உத்தியோக ஸ்தானம் பலமாக இருக்க வேண்டும் எனப்படுகின்றது.

இதனோடு சேர்த்து சூரியன், செவ்வாய் மற்றும் கர்மகாரகன் சனி பகவானின் அருள் மிகவும் அவசியமாகும்.
இந்த 2026-ஆம் ஆண்டில் நிகழும் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் பல ராசிகளுக்கு உழைப்பு சார்ந்த நற்பலனை கொடுக்கப்போகின்றது.

மிதுனம்
- மிதுன ராசிக்கு 10-ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சனி அமர்வதால் உத்தியோகத்தில் பெரிய மாற்றங்கள் கிடைக்கும்.
- குரு பகவானின் அருளால் உக்களுககு அரசு வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
- எனவே சேர்ந்து அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதினால் நிச்சயம் உங்களுக்குப் பணி ஆணை கைக்கு வரும்.
ரிஷபம்
- 2026-ல் சனி பகவான் உங்களுக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார்.
- இதனால், நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து எழுதிய போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைவீர்கள்.
- உங்களுக்கு அரசு வேலை கிடைக்க அனைத்து சாதகமான பலன்களும் அமையும்.
சிம்மம்
- உங்கள் ராசிநாதன் சூரியன் என்பதால் இயல்பாகவே உங்களுக்கு அரசு வேலை மீது ஈர்ப்பு இருக்கும்.
- இந்த ஆண்டு குரு மற்றும் சனியின் சாதகமான பார்வையால், நீங்கள் எழுதும் போட்டித் தேர்வுகளில் (TNPSC, UPSC, SSC) மிக எளிதாகத் தேர்ச்சி பெற்றுவீர்கள்.
- நிர்வாகத் துறை மற்றும் காவல் துறையில் வேலை நிச்சயம்.
துலாம்
- போட்டித் தேர்வுகளுக்குத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் துலா ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமானது.
- 6-ஆம் இடத்து சனி எதிர்ப்புகளையும், போட்டித் தேர்வுகளையும் எளிதாக வெல்ல வைப்பார்.
- நீங்கள் அரசாங்க வேலைக்கு முயற்ச்சி எடுப்பது நன்மை தரும்.
விருச்சிகம்
- செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற உங்களுக்குக் குருவின் பார்வை பலம் கிடைப்பதால், இந்த ஆண்டு நடத்தப்படும் அரசுத் தேர்வுகளில் எளிதாகத் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் அமர்வீர்கள்.
- எத்தனை தடை வந்தாலும் குறிக்கோளை வட்டுக்கொடுக்காமல் இருப்பது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).