நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஊறுகாய்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
நெல்லியானது நம் உடலில் இருக்கும் பல விதமான நோய்களை தீர்க்கும் பல சக்திகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுக்காய் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 1/2 கிலோ கிராம்
பூண்டு - 15 பல்
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
பெருங்காய தூள் - 1/2 தே.கரண்டி
வினிகர் - 1 1/2தே.கரண்டி
வெந்தயம் - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
கடுகு எண்ணெய் - 6 தே.கரண்டி
உப்பு - 2 தே.கரண்டி
செய்முறை
நெல்லிக்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக சூடானதன் பின்னர் நெல்லிக்காய்களை போட்டு நன்றான வதக்க வேண்டும்.
நெல்லிக்காய் நன்றாக வதங்கிய பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் கடுகு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.
கடுகு நன்றான பொறிந்ததும் நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதனடன் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் பெருங்காய பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அது நன்றாக வதங்கியதும் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
அந்த கலவையுடன் வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள நெல்லிக்காயை அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 8 தொடக்கம் 10 நிமிடங்கள் நன்றாக வேக வைத்தெடுத்தால் நெல்லிக்காய் ஊறுகாய் தயார். உறுகாய் ஆறியவுடன் ஒரு ஜாரில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
நெல்லிக்காய் ஊறுகாயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த நன்மை பயக்கும்.