கொத்து கொத்தாக முடி உதிர்கிறதா...? வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்தால் போதும்
நெல்லிக்காய் பலன்கள்
ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும்.
நெல்லிக்காயின் தன்மையே நோய் எதிர்ப்பு சக்தி பண்புகள் அதில் அடங்கி உள்ளது தான். அதனால் தான் நெல்லிக்காயை லேகியம் , சூரணம் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது.
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு பார்ப்போம் -
உடல் எடை குறைக்க
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும்.
ரத்தத்திற்கு
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும். உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இதயத்திற்கு
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
கண்களுக்கு
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், கண் பிரச்சனை, கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
கர்ப்பப்பைக்கு
சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அவர்கள் தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம். கர்ப்ப்பாய் பாதிப்புகள் நீங்கி சீரான மாதவிலக்கு உண்டாகும்.
சிறுநீரகத்திற்கு
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.
சருமத்திற்கு
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், சுருக்கங்கள் மறைந்து முகத்தின் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.
முடி பிரச்சனைக்கு
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், முடி உதிர்தல் பிரச்சினை சரியாகும். அதிகமாக முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.