புனிதமான துக்க நாள்... புனித வெள்ளி என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?
கிறிஸ்தவர்களால் அனுஸ்டிக்கப்படும் ஒரு புனித நாளாக இந்த புனித வெள்ளி எனும் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. இது பொதுவாக கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் இயேசுபிரான் உயிர் திறந்த நாளாக நம்பப்படுகிறது. இந்த நாளில் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெறும்.
இந்த நாளை புனித வெள்ளி என அழைப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
புனித வெள்ளி
இதை புனித வெள்ளி என அழைக்கப்பட காரணம் இந்த நாளில் தான் இயேசு பாவங்களை நீக்குவதற்காக ஏசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்துகொண்டு உயிர்நீத்ததாக கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கருதுகிறார்கள்.
இந்த வெள்ளி எல்லா வருடமும் ஒரே திகதியில் மற்றய நாட்களை போல வராது. இது வசந்த உத்தராயணத்தின் முதல் முழு நிலவுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் சந்திர நாட்காட்டியின் படி கொண்டாடப்படுகிறது. இது முழுக்க முழுக்க துன்பமான நாளாக கருதப்படுகிறது. எனவே கிறிஸ்தவர்கள் இந்த நாளில் விரதம் அனுஸ்டிப்பார்கள். மாமிசம் உண்ண மாட்டார்கள்.
ஏசு உயிர்நீத்த நாள் என அனுசரிக்கப்படும் இந்த புனித வெள்ளியில் தேவாலயங்களில் துக்கமான பாடல்கள் பாடப்படுகின்றன. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் சுத்த போசனத்தை கடைபிடிப்பார்கள்.
இந்த வெள்ளிக்கழமையில் இருந்து வரும் ஞாயிற்றுக் கிழமை இயேசுவின் ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தேவாலயங்களில் சிலுவை ஒரு வெள்ளை துணியால் மூடப்பட்டிருக்கும்.
மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர் பெற்ற நாளாகும். இந்த நாள் உயிர் ஈர்த்த ஈஸ்டர் தினம் என கொண்டாடப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |