நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழவேண்டுமா? அப்போ இந்த பொருட்களை தானம் செய்ங்க
இந்துக்களி்ன் ஜோதிட சாஸ்திரத்தில் தானம் கொடுப்பது என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
தானம் கொடுப்பதால் நாம் செய்த பாவங்களில் இருந்து கொஞ்சம் விடுபடலாம் என்பது ஐதீகம். அந்த வகையில் நாம் குறிப்பிட்ட சில பொருட்களை தானம் செய்யும் போது அது நமது வீட்டில் செல்வம் மற்றும் செழிப்பை இரட்டிப்பாக வைக்கிறது.
பிறருக்கு தானம், உதவி செய்வதால் புண்ணிங்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருந்து வருகிறது. அது என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தானம் கொடுத்தல்
கருப்பு எள்ளு எம்மில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த பொருளை சனிக்கிழமைகளில் தானம் கொடுக்கலாம். சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உரியது என்பதால் அந்த நாளில் கருப்பு எள்ளு தானம் செய்வதால் சனியின் அருள் கிடைக்கும்.
உங்கள் ராசியில் வியாழபகவான் பலவீனத்துடன் இருந்தால் நீங்கள் துவரம் பருப்பை தானமாக கொடுக்கலாம். இதன் மூலம் குரு பகவானின் சிறப்பு அருள் பெற்று அதிர்ஷ்டம் உண்டாகும்.
செவ்வாய் பகவானை மனதில் நினைத்து தானம் செய்ய வேண்டிய பொருள் மைசூர் பருப்பாகும். இதன் மூலம் செவ்வாயின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி லட்சுமி, விஷ்ணு கடவுளின் ஆசியை பெற எலலோரும் பட்டாணியை தானம் செய்ய வேண்டு்ம். இவ்வாறு எந்த எதிர்பாப்பும் இல்லாமல் செய்யும் தானங்கள் ஏதாவது ஒரு வகையில் நன்மை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |