பிரபல தொகுப்பாளினிக்கு அடித்த அதிஷ்டம்! எந்த நாட்டில் தெரியுமா?
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கி வருகிறது.
இந்த கோல்டன் விசா தமிழ் தொகுப்பாளினி ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கோல்டன் விசா
2019ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகம் கலை, அறிவியல், கல்வி, விளையாட்டு என்று ஒவ்வொரு துறையிலும் பிரபலமாக உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து அந்த நபர்களுக்கு கோல்டன் விசா கொடுத்து வருகின்றது.
நீண்ட நாட்கள் தங்கி இருக்கக்கூடிய குடியுரிமை விசாவை தான் விசா எனப்படும்.
தற்போது இந்திய கலைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் இந்த கோல்டன் விசா கொடுக்கப்பட்டு வருகின்றது.
தொகுப்பாளினி
இந்த கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்தீபன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ் திரையுலக பிரபலங்களான திரிஷா, விஜய் சேதுபதி, அமலாபால், மீனா, சிம்பு உள்ளிட்டோர்களுக்கும் கோல்டான் விசா வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வரிசையில் பிரபல தொகுப்பாளினியும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது பிரபலமான நிகழச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கோல்டன் விசாவை வழங்கியதற்கு மிக்க நன்றி தெரிவித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.