அன்றே நடிகர் பார்த்தீபன் மீது இருந்த காதலால் மொட்டையடித்த சீதா! உண்மையை உடைத்த இயக்குனர்
நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் பாதை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றார்.
நடிகர் பார்த்திபன் இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் மற்றும் கதாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
இதுவரை இவர் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 12 படங்களை தயாரித்துள்ளார் மேலும் 14 படங்களை இயக்கியும் உள்ளார். மேலும், பார்த்திபன் தான் இயக்கி நடித்த 'புதிய பாதை' படத்தில் நடிகையாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். ஆனால் பிறகு இவர்களது திருமண உறவில் ஏற்பட்ட விரிசலினால் 2001-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இதையடுத்து, 43 வயதில் 2010-ம் ஆண்டு டிவி நடிகர் சதீஷ் என்பவரை நடிகை சீதா திருமணம் செய்துகொண்டார். ஆனால், மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக இவரையும் 2006ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்.
நடிகை சீதா இரண்டு திருமணம் செய்த போதும் தாய் உடனே தனது மகன் வசித்து வருகிறார். இதனிடையே, பார்த்திபனின் குரு பாக்யராஜ் ஒரு பேட்டியில், பார்த்திபனின் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவருக்காக சீதா மொட்டை போட்டுக்கொண்டதாகவும்,
இந்த காதலை கண்டு தான் ஆச்சர்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களை தற்போது ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.