தங்கத்தில் மசால் தோசை செய்யும் விசித்திர ஹோட்டல்: எவ்வளவு தெரியுமா?
துமகூரிலுள்ள உணவகத்தில் தங்க தோசை விற்பனையாகுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்க மசால் தோசை
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் துமகூரு எனும் ஊரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க மூலாமிட்ட தோசைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தோசையொன்றின் பெறுமதி 1,001 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தோசைக்கான 24 காரட் தங்கத்தின் மூலம் செய்யப்படுகிறது. இதற்கான தங்க முலாம்கள் குஜராத்திலிருந்து வரவழைக்கப்படுகிறது.
எப்படி செய்றாங்க தெரியுமா?
இந்நிலையில் தோசை தயாரிக்கும் போது அதன் மேல் கொண்டுவரப்பட்ட தங்க மூலாம் தாள்கள் வைக்கப்பட்டு தயாரிக்கப்படும் என அந்த ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தோசைகள் நாளொன்றுக்கு 15 முதல் 20 தங்க விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.