தோசை மொறு மொறுவென இருக்கணுமா? மாவு அரைக்கும் போது இதை செய்திடுங்க
வீட்டில் சமைக்கும் உணவுகள் ஹொட்டல் உணவுகளை விட சுவையில் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் அவ்வாறு சுவை அதிகமாக இருக்கும் ஹொட்டல் உணவுகளில் கலக்கப்படும் பல ராசாயணங்கள் மனிதர்களின் உயிருக்கே உலை வைத்துவிடும்.
மொறுமொறு தோசைக்கு
இனிப்புகள் தயாரிக்க பாலை திரிக்கும்போது எலுமிச்சைக்கு பதிலாக வினிகர் சேர்த்துக் கொண்டால் அதிக புளிப்புத் தட்டாது.
தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்தம்பருப்புடன் சிறிதளவு கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மொறுமொறு தோசை கிடைக்கும்.
பழ சாலட் தயாரிக்கும் போது கடுகு, மிளகு, உப்பு ஆகியவற்றை வறுத்து, நுணுக்கிச் சேர்த்தால் சுவை மேலும் கூடும்.
தேங்காய்ச் சட்னி அரைக்கும்போது புளிக்காத தயிர் சேர்த்து அரைத்தால் வெண்மை நிறமும் மணமும் நிறைந்த சுவையான சட்னி கிடைக்கும்.
உப்புமாவுடன் தேங்காய் துருவல்
சுண்டல் கடலை, பயறு வகைகளை வேக வைக்கும்பாது சிறிதளவு இஞ்சியை தோல் சீவித் தட்டிச் சேர்த்தால் மணமாக இருப்பதுடன் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.
உப்புமா தயாரிக்கும் போது ரவை வெந்து வரும் நேரத்தில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறினால் அருமையாக இருக்கும்.
மோர்க்குழம்பு தயாரிக்கும் போது இரண்டு மோர் மிளகாய் வற்றலை வறுத்து குழம்பில் சேர்த்தால் கமகமக்கும்.
சாம்பாரில் மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கிச் சேர்த்தால் அருமையாக இருக்கும்.