உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலி! மள மளவென உயர்ந்த தங்கம் விலை!
உக்ரைன் மற்றும் ரஷியா போர் தொடுத்து வருவதால் சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் தங்கம் விலை, தற்போது போரால் மீண்டும் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதன்படி சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1240 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 38,992 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ 155 உயர்ந்து 4,874- க்கு விற்பனையாகிறது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்த விலை உயர்வு நடந்துள்ளது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2.70 உயர்ந்து ரூ 71.40 க்கு விற்பனையாகிறது. இதுமட்டுமின்றி, ரஷ்யா, உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் சப்ளையில் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 92 ரூபாய் அதிகரித்து, 4,827 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 736 ரூபாய் அதிகரித்து, 38,616 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.