மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - இதோ வெளியான நிலவரம்!
இதோ தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.
இன்று தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,645க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை ரூ.20 உயர்ந்து ரூ.5,665க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.45,160க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.45,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,665
8 கிராம் - ரூ. 45,320
10 கிராம் - ரூ. 56,650
100 கிராம் - ரூ.5,66,500
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.80.50க்கு விற்பனையானது. இன்று ரூ.0.05 உயர்ந்து ரூ.81க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.648க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.81
8 கிராம் - ரூ.648
10 கிராம் - ரூ.810
100 கிராம் - ரூ.8,100
1 கிலோ - ரூ.81,000