தங்கம் வெள்ளிக்கு இனி மதிப்பில்லை - அடுத்த தலைமுறை உலோகம் இதுதான்
தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தை காட்டிலும் எதிர்காலத்தில் இந்த ஒரு உலோகத்தின் பயன்பாடுதான் மிக அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த தலைமுறை உலோகம்
வளர்ந்து வரும் இந்த தொழிநுட்ப்தால் மனித வாழ்க்கையில் பல விடயங்கள் மாற்றி மைக்கபடுகின்றது. அதற்கு மக்களும் பழகி கொள்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வாகனத்தில் மனித பயன்பாடு மாற்றபட்டு உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக உலகம் முழுவதும் மின்சார வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த வாகனங்களின் இதயம் போல முக்கியமாக இருப்பது லித்தியம் ஆகும். இந்த லித்தியம்-அயன் பேட்டரிகள் தயாரிப்பதற்கு மூலமாக காணப்படுகின்றது.

சூரிய சக்தி மற்றும் காற்று ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நீண்ட நேரம் சேமித்து வைக்க பெரிய அளவிலான பேட்டரி அடுக்குகள் தேவை.
இதற்கு லித்தியம் தாது மிகவும் முக்கியமானது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் முதல் விண்வெளி ஆராய்ச்சி கருவிகள் வரை அனைத்திலும் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளுக்கு லித்தியமே முதன்மைத் தேர்வாக உள்ளது.

மற்ற உலோகங்களை விட இது எடை குறைந்தது மற்றும் அதிக ஆற்றலைச் சேமிக்கும் திறன் கொண்டது. பல நாடுகள் 2030 அல்லது 2040-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக்க இலக்கு வைத்துள்ளன.
இதனால் கச்சா எண்ணெய் பயன்பாடு குறைந்து, மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கிறது. இதுபோன்ற பல காரணங்களுக்காக தங்கம், வெள்ளி, ப்ளாட்டினம் உலோகத்தை விடவும் லித்தியத்தின் தேவை எதிர்காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |