இந்த நாட்டில் தண்ணீரை விட பீர் மலிவாக கிடைக்குமாம் - எந்த நாடு தெரியுமா?
மனிதர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும் பீர் குறிப்பிட்ட ஒரு நாட்டில் இலவசமாகவும் மலிவாகவும் கிடைக்குமாம்.
பீர் மலிவாக கிடைக்கும் நாடு
உலகம் முழுவதும் நாம் பயணம் செய்யும் போது, சுற்றுலா இடங்களின் சூழலுக்கு ஏற்ப ஹோட்டல்கள் தங்கள் விருந்தினர்களுக்கு சிறந்த விருந்தோம்பலும் வசதிகளையும் வழங்குகின்றன.
சிலர் மது அருந்துவதை விரும்பாவிட்டாலும், பல பயணிகள் பயணத்தின் போது ஒன்று அல்லது இரண்டு பானங்களை ரசிக்க விரும்புகிறார்கள்.
அப்படியான ஒரு சூழலில், குறிப்பாக வெப்பமண்டல பகுதிகளில் உள்ள ஹோட்டல் அறைக்குள் நுழையும்போது, தண்ணீர் பாட்டில்களுக்கு அருகில் மினி-பாரில் குளிர்ந்த பீர் இலவசமாக வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பது ஒரு கனவு போல தோன்றும்.

உலகில் ஒரு சிறிய நாட்டில் பீர் விலை தண்ணீரைவிடக் கூட குறைவாக உள்ளது. இதற்குக் காரணமாக அந்நாட்டின் புத்திசாலித்தனமான வரி அமைப்புகள், உள்ளூர் பீர் காய்ச்சும் முறைகள் மற்றும் அங்குள்ள கலாச்சார பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.
இந்த காரணங்களால் அந்த நாடு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
எங்கே தண்ணீரை விட பீர் விலை குறைவு
நாம் எப்போதாவது ஒரு பீர் போ்ததலை விட தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி இருப்போமா? ஆனால் வியட்நாமில் இது சாதாரணமான ஒன்றாகவே உள்ளது.
உலகிலேயே மிக மலிவான பீர் கிடைக்கும் நாடுகளில் வியட்நாம் முக்கிய இடத்தில் உள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு வீடியோவில், ஒரு உள்ளூர் விற்பனையாளர் சாலையோரத்தில் வைத்துள்ள கொள்கலனிலிருந்து கண்ணாடி கிளாஸில் பீர் வைத்து விற்றுக்கொண்டு இருக்கிறார்.

வியட்நாமின் சாலையோரக் கடைகளில், ஒரு கிளாஸ் பீர் 5,000 முதல் 10,000 வியட்நாமிய டாங் மட்டுமே. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.16 முதல் ரூ.35 ஆகும்.
அதே நேரத்தில், 500 மில்லி தண்ணீர் பாட்டில் 30,000 டாங், அதாவது சுமார் ரூ.96 விற்கப்படுகிறது.
இதனால், ஒரு தண்ணீர் பாட்டிலின் விலையில் இரண்டு அல்லது மூன்று பீர்களை வாங்க முடிகிறது. இந்த விலை வேறுபாடே வியட்நாமை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடமாக மாற்றியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |