Bigg Boss: பிக்பாஸிலிருந்து அடுத்து வெளியேறியது யார்? அதிருப்தியில் சக போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அடுத்ததாக இன்று கனி வெளியேறியுள்ளது உறுதியாகிய நிலையில், சக போட்டியாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 11 போட்டியாளர்கள் விளையாடி வந்த நிலையில், நேற்றைய தினம் அமித் பார்கவ் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இவர்களில் இன்று ஒருவர் வெளியேறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் சாண்ட்ரா மற்றும் கனி இருவரையும் வைத்துக் கொண்டு விஜய் சேதுபதி சக போட்டியாளர்களிடம் யார் வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பெரும்பாலான போட்டியாளர்கள் சாண்ட்ரா வேண்டாம்... கனி வேண்டும்... என்று கூறியிருந்தனர். பின்பு விஜய் சேதுபதி மக்கள் யார் இருக்க விரும்புகிறார்கள் என்று எவிக்ஷன் கார்டை வெளியே காட்டியுள்ளார்.
இதில் கனி வெளியேற்றப்பட்டு, சாண்ட்ரா காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சக போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு ப்ரொமோ காட்சியில் விக்ரம் திவ்யா இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் திவ்யா விக்ரமின் மனைவியைக் குறித்து பேசியுள்ளார்.
மனைவியைக் குறித்து எதற்காக பேசினீர்கள்? என்று விக்ரம் உச்சக்கட்ட ஆதங்கத்திற்கு சென்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இத்தனை நாட்களில் விக்ரம் இவ்வளவு கேபப்பட்டது இல்லை என்பதால் ரசிகர்களும் சற்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |