ஒரே வாரத்தில் உங்கள் உடல் பளபளப்பாக மின்ன வேண்டுமா? அப்போ நீங்க இனி உண்ணவேண்டியது இது தான்!
பொதுவாகவே பெண்களும் சரி ஆண்களும் சரி தனது உடல் பளபளப்பாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கவே விரும்புவார்கள். அதற்காக சிலர் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேலும், தற்போது இருக்கும் குளிர்காலநிலை காரணமாக சருமம் வறண்டு ஈரப்பதன் இல்லாமல் போயிருக்கும் அதனால் உங்கள் முகமும் பொழிவிழந்திருக்கும். உங்கள் சருமம் பொழிவாக மாற இயற்கையான உணவுகளை உண்கொண்டாலே போதும்.
அவ்வாறான உணவுகளை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
கேரட்
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொற்றாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. மேலும், கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.
இது புற ஊதா கதிர்களில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், விட்டமின் சி, விட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.
இதனால் சருமத்தை ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல் உள்ளிருந்து பளபளக்கச் செய்கிறது.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, திராட்சை, லைம் போன்ற சிட்ரஸ் பழங்கள் ஏராளமாக கிடைக்கும் நேரம் குளிர்காலம்.
இந்த விட்டமின் சி நிறைந்த பழங்கள் சிறந்த குளிர்காலங்களுக்கு ஏற்ற பழங்களாகவும் மற்றும் உங்கள் முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் பக்றீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சரும அழகை மெருகூட்டுவதற்கு உதவுகிறது.
மஞ்சள்
மஞ்சளில் பக்றீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் அதிகம் உள்ளன. இது சருமத்தை பளபளக்க உதவுகிறது, இது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து அழுக்கு மற்றும் பக்றீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதால், சருமம் பளிச்சிடும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
சியா விதைகள்
சியா விதைகள் தாதுக்கள், விட்டமின்கள், புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும்.
சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது மட்டுமின்றி, அவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும்.
இது உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது மற்றும் முகப்பரு தழும்புகள், நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது.