இந்த மாதிரியான தேளை வாழ்நாளில் பார்த்து இருக்கிறீர்களா?
தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் இணையத்தில் செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் மிகவும் விரும்பத்தக்கவையாக இருக்கின்றன.
பெரும்பாலும் நாய், பூனை, பறவைகள் என பல விலங்குகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாவது உண்டு. அந்த வகையில் ஒரு தேளின் மேஸ்மரைசிங் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
கொடிய விஷம் கொண்ட கொடுக்குகளை கொண்டிருக்கும் தேள் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக தேள் இருளில் ஒளிரும் என்பது இன்னும் வசீகரிக்கும் விஷயமாக இருக்கிறது.
அதிலும் அந்த தேளின் மேல் ஏராளமான குட்டி தேள்கள் அமர்த்திருந்ததால் இருட்டில் பார்க்கும் போது தேளின் உடல் மட்டும் நியான் நிறத்தில் இருந்தது.
இந்த வீடியோவை பார்த்த பலரும், இது பார்ப்பதற்கும் மிகவும் மெஸ்மரைசிங்காக இருக்கிறது. இருப்பினும் அச்சுறுத்தும் விதமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 17,000திற்கும் மேற்பட்ட வியூஸ்களையும், ரீடிவீடுகளையும் பெற்றுள்ளது.
கிட்ஸ் டிஸ்கவர் வலைத்தளத்தின்படி, அனைத்து தேள்களும் மின்சார பிளாக்லைட் அல்லது இயற்கை நிலவொளி போன்ற புற ஊதா ஒளியின் கீழ் ஒளிரும் என்று கூறப்படுகிறது.