குளியலறையிலிருந்து வெளியே வராத மகள்! கதவை உடைத்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
காதலன் உயிரிழந்த நிலையில், மனவருத்தத்தில் இருந்த காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
உயிரிழந்த காதலன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ஜான்சிலா(21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்துவந்தார்.
சாலை விபத்தில் காதலனை நினைத்து மன வருத்தத்தில் இருந்த ஜான்சிலா, சம்பவத்தன்று குளியலறை சென்று வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்து பெற்றோர் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததார்.
பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், ஜான்சிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விசாரணையில், காதலன் சாலை விபத்தில் உயிரிழந்த பின்பு யாரிடமும் பேசாமல் மன வருத்தத்தில் இருந்ததும், இதனால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.