கடலின் அருகே நடந்த திருமணம் - திடீரென எழுந்து வந்த ராட்சத அலை! வைரல் வீடியோ
உலகில் திருமணம் குறித்த பார்வை இன்றைய காலத்தில் வெகுவாகவே மாறியுள்ளது. வாழ்வின் முக்கிய தருணமான திருமணத்தை தங்களுக்கு பிடித்த இடங்களில் நடத்த ஆசைப்படும் மக்கள், வித்தியாசமான இடங்களில் திருமணத்தை கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில், கடற்கரையில் திருமணங்களை நடத்துவது சமீப ஆண்டுகளில் மிக பிரபலம் ஆகியுள்ளது. அப்படி டிலான் மற்றும் ரிலே மர்பி என்ற தம்பதிக்கு ஹவாயில் திருமணம் செய்துகொள்ள ஆசை.
இதற்காக அமெரிக்காவில் இருந்து 2000 மைல் தூரத்தில் அமைந்துள்ள ஹவாய் தீவுக்கு தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பின்னர், ஹவாயில் உள்ள மிகப்பெரிய தீவான கைலுவா-கோனாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக இவர்களது திருமணத்தில் அழையா விருந்தாளியாக கடல் அலை ஆக்ரோஷமாக நுழையவே அங்கிருந்தவர்கள் அனைவரும் பதறியடித்து ஓடியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய தம்பதியினர்கள் “நல்ல வேலையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேஜைகளில் உணவு பரிமாறப்படுவதற்கு முன்னரே அலை உள்ளே நுழைந்துவிட்டது. இதனால் விருந்தினர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட உணவுகளும் சேதமைடையாமல் தப்பித்தது” எனக்கூறியுள்ளனர்.
இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
If you don’t believe in sea level rise, this happened here in Hawaii yesterday. As pollution worsens, no one will be safe. Your wealth won’t save you. pic.twitter.com/zDrb2pcomy
— Kaniela Ing (@KanielaIng) July 18, 2022