சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்?
நெய்யிற்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் ஆற்றல்கள் உள்ளன.
நெய்யை தவறாமல் உட் கொள்ளும் பொழுது சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது. ஆனால் நெய்யில் எவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் ஒரு நாளில் குறிப்பிட்ட அளவு மாத்திரமே உட்க் கொள்ள முடியும்.
ஆயுர்வேதத்தின்படி, நெய்யில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற கூறுகள் உள்ளதாக கூறப்படுகின்றது. இது சருமத்துடன் சேர்த்து உடல், கூந்தல் இரண்டையும் பாதுகாக்கின்றது.
அந்த வகையில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? அதனை ஒரு நாளுக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
1.நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளன. இதனால் எந்தவித பயமும் இல்லாமல் சாப்பிடலாம். இதய நோயை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் நெய்யில் முற்றிலும் குறைவாக உள்ளன.
2. நெய் சாப்பிடுவதால் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் இது அல்சர் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கின்றது.
3. ப்யூட்ரிக் அமிலம் எனப்படும் அமிலம் நெய்யில் இருக்கின்றது. இது உடலை எதிர்க்கும் டி-செல்களை உருவாக்க உதவுகிறது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக வேலை செய்கின்றது. அத்துடன் குடல் சுவர்களை வலுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் நெய் உதவியாக இருக்கின்றது.
4. நெய் சாப்பிடுவதால் சருமத்திற்கு புது பொலிவு கிடைக்கும். ஏனெனின் நெய்யில் ஒமேகா 3, ஒமேகா 9 ஆகிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கின்றது. மாறாக சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும் வேலையையும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |