Pradeep Rawat : கஜினி பட வில்லன் நடிகர் காலமானார்

Tamil Cinema Death Tamil Actors
By Vinoja Aug 05, 2026 04:44 AM GMT
Report

pradeep rawat : தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்ற மூத்த நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக 74 வயதில் காலமானார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருகட்டத்தில் உடல்நலம் தேறி, நோயிலிருந்து மீண்டிருந்தார். எனினும், சில மாதங்களுக்கு முன்பு நோய் மீண்டும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

Pradeep Rawat : கஜினி பட வில்லன் நடிகர் காலமானார் | Ghajini And Lagaan Villan Pradeep Rawat Passed

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் நேற்று (4) மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதீப் ராவத்தின் மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்!

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்!

நடிகர் பிரதீப் ராவத் 

1952 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர். சோப்ரா தயாரித்த புகழ்பெற்ற மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

Pradeep Rawat : கஜினி பட வில்லன் நடிகர் காலமானார் | Ghajini And Lagaan Villan Pradeep Rawat Passed

அதன்பின்னர் திரைப்பட உலகில் வலுவான வில்லன் நடிகராக உருவெடுத்து, பல மொழித் திரைப்படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

குறிப்பாக, லகான் திரைப்படத்தில் தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரத்திலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.தொடர்ந்து அஜித் நடித்த வீரம் திரைப்படத்திலும் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.

Pradeep Rawat : கஜினி பட வில்லன் நடிகர் காலமானார் | Ghajini And Lagaan Villan Pradeep Rawat Passed

Keerthy Suresh Salary : ஒரே பாடலுக்கு ஒரு கோடியா? கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறித்து வெளியான தகவல்!

Keerthy Suresh Salary : ஒரே பாடலுக்கு ஒரு கோடியா? கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறித்து வெளியான தகவல்!

தமிழ், இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி திரைப்படங்களிலும் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்த பிரதீப் ராவத், தனது தனித்துவமான குரல், வலுவான உடல்மொழி மற்றும் இயல்பான நடிப்பால் இந்திய திரையுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றிருந்தார். அவரது மறைவு இந்திய திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US