சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்!

Tamil Cinema Tamil Actors Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Vinoja Aug 02, 2026 09:05 AM GMT
Report

Sujatha Vijayakumar press meet : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது.

நீதிமன்ற நடவடிக்கைகள், ஜீவனாம்சம் தொடர்பான விவாதம், குழந்தைகளை சந்திக்கும் உரிமை, பாடகி கெனிஷா பிரான்சிஸின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் இழுக்கப்படுவது என இந்த விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்! | Ravi Mohan Mother In Law Open Up Family Issue

விஜயை பெருமையாகப் பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - வைரலாகும் பேட்டி

விஜயை பெருமையாகப் பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - வைரலாகும் பேட்டி

சுஜாதா விஜயகுமார் ஓபன் டாக்  

இந்த சூழலில், ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அந்த பேட்டியில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுப் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்! | Ravi Mohan Mother In Law Open Up Family Issue

பேட்டியில் பேசிய சுஜாதா விஜயகுமார், சமீபத்தில் ஜேசன் சஞ்சய் அளித்த ஒரு நேர்காணலை பார்த்ததாக கூறினார். அதில், தனது தந்தையைப் பற்றி சஞ்சய் மிகுந்த மரியாதையுடனும் பெருமையுடனும் பேசிய விதம் தன்னை மிகவும் நெகிழச் செய்ததாகவும், அதைப் பார்த்தபோது கண்கலங்கியதாகவும் தெரிவித்தார்.

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்! | Ravi Mohan Mother In Law Open Up Family Issue

"கணவன்–மனைவிக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், பிள்ளைகள் தங்கள் தந்தை மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்க வேண்டும். சஞ்சய் பேசிய விதம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு," என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, தனது பேரன்கள் தொடர்பாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் சுஜாதா விஜயகுமார் பகிர்ந்துகொண்டார். அவரது குறிப்பிடுகையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு தனது பேரன் வெளிநாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக பாஸ்போர்ட் ஆவணங்களில் ரவி மோகனின் கையெழுத்து தேவைப்பட்டதாக தெரிவித்தார்.

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்! | Ravi Mohan Mother In Law Open Up Family Issue

அதற்காக ரவி மோகனை தொடர்புகொண்டபோது, முதலில் வருவதாக கூறியதாகவும், பின்னர் அவரது தொலைபேசியில் இருந்து நீண்ட குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும் அவர் கூறினார். அந்த செய்தியில், "நான் ஏன் உதவ வேண்டும்? நான் என்ன ஏடிஎம் மெஷினா?" என்ற பொருளில் எழுதப்பட்டிருந்ததாகவும், அதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், அந்த குறுஞ்செய்தியை நேரடியாக ரவி மோகனே அனுப்பியிருப்பார் என்று தாம் நம்பவில்லை என்றும், அவருடன் இருப்பவர்கள்தான் அதை அனுப்பியிருக்கலாம் என்று தனிப்பட்ட சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தினார். மேலும், பாடகி கெனிஷா பிரான்சிஸை குறிப்பிட்டும் சுஜாதா விஜயகுமார் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்! | Ravi Mohan Mother In Law Open Up Family Issue

அந்த பெண்ணுடன் தான் இருக்கின்றார்...

அவரது கூற்றுப்படி, கெனிஷா தற்போது கூட ரவி மோகனுடன் இருப்பதாகவும், வெளியில் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தோற்றம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், குழந்தைகளை சந்திக்கும் சூழலில் ஒரு ஹீலர் உடன் இருக்க வேண்டும் என்று ரவி தரப்பில்  கூறப்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் எப்படி இயல்பாக செல்வார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். குறித்த பேட்டி  தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்! | Ravi Mohan Mother In Law Open Up Family Issue

13 வயதில் தாய் - தனது 7 மாத குழந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்திய சிறுமி!

13 வயதில் தாய் - தனது 7 மாத குழந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்திய சிறுமி!

ரவி மோகன்–ஆர்த்தி விவகாரத்தில் கெனிஷாவின் பெயர் ஏற்கனவே பலமுறை பேசப்பட்டது. அதற்கு அவர் முன்னதாகவே மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், ரவி மோகனிடம் இருந்து விலகப் போவதாகவும், ஊடக வெளிச்சத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சுஜாதா விஜயகுமார் மீண்டும் கெனிஷா குறித்து கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல், ஜேசன் சஞ்சயை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட அவரது பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US