Getti Melam: கொடூர அரக்கனாக மாறிய மகேஷ்... தண்டவாளத்தில் உயிருக்கு போராடும் முருகன்!
கெட்டி மேளம் சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் அரங்கேறிவரும் நிலையில், தற்போது சைக்கோதனத்தின் உச்சத்திற்கே மகேஷ் சென்றுள்ளார்.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியலின் புதிய ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளது.
கணவரின் சைக்கோ செயல்களை அறிந்த அஞ்சலி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தானே சமாளித்து வந்த நிலையில், வீட்டில் அடைத்து வைத்திருக்கும் முருகனின் தாயையும் அவதானிக்கின்றார்.
ஆனால் முருகனின் தாய் என்பதை அறியாமல், அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றார். தற்போது பாட்டி கண்விழித்த நிலையில், சிவராமனிடம் மகேஷ் குறித்த அனைத்து உண்மையையும் கூறியுள்ளார்.
சிவராமனை பிடித்து வருவதற்கு அடியாட்களை மகேஷ் அனுப்பியுள்ளார். மறுபுறம் முருகனை தீர்த்து கட்டுவதற்கு ஆட்களை அனுப்பியுள்ளார்.
இத்தருணத்தில் சிவராமன் அவர்களிடமிருந்து தப்பித்து வரும் போது, முருகனை தண்டவாளத்தில் படுக்க வைத்து கொலை செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
ஒருவழியாக சிவராமன் அவர்களிடமிருந்து முருகனை காப்பாற்றினாலும், முருகனின் கால் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. எதிரே ரயில் வேறு வந்த நிலையில், இருவரும் உயிர் பிழைத்துவிடுவார்களா? என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
