நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் - தங்க சுரங்கத்தை கண்டுபிடித்த புவியியலாளர்கள்
தற்போது தங்கம் வெள்ளி இருக்கும் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போது உள்ள தங்கம் விலையில் மாற்றம் கொண்டு வருமா என்பதை பார்க்கலாம்.
தங்க சுரங்கம்
அர்ஜென்டினா மற்றும் சிலியின் தொலைதூர எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள ஆண்டிஸ் மலைப்பகுதியில் மிகப்பெரிய கனிம இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சுரங்கம் விகுனா கனிம வளம் என்று அழைக்கப்படுகின்றது. அதிலும் இது உலகளாவிய காப்பர், தங்கம் மற்றும் வெள்ளி விநியோகத்தில் முக்கியமான அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இந்த சுரங்கத்தில் 13 மில்லியன் டன் தாமிரம், 32 மில்லியன் அவுன்ஸ் தங்கம் மற்றும் 659 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு தற்போது இருக்கும் முக்கிய கனிம விநியோகத்தில் எலகளாவிய ரீதியில் சமநிலையை ஏற்படுத்தும் என தொழில் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் என உலகம் விரைவாக மாறிவரும் சூழலில், உலகளவில் காப்பருக்கான தேவை அதிகரித்துவரும் நேரத்தில் இந்தச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2040-ம் ஆண்டுக்குள் காப்பருக்கான தேவை இரட்டிப்பாகும் என சர்வதேச எரிசக்தி அமைப்பின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
காப்பர் மட்டுமல்ல, மின்னணுவியல் சோலார் பேனல்கள் மற்றும் செயற்கைக்கோள் கூறுகளில் இன்றியமையாதவையாக தங்கம் மற்றும் வெள்ளிக்கான இடைவெளியையும் விகுனா திட்டம் நிறைவேற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |