மகளுக்கு “சிங்கப்பூர்” என பெயர் சூட்டிய காசா தம்பதி! கண்ணீர் மல்க வைக்கும் காரணம்
காசாவில் போர் பதற்றத்துக்கு நடுவே, தங்களுக்கு உணவளித்த சிங்கப்பூருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, சிங்கப்பூர் என பெயரிட்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹம்தான் ஹதாத் தம்பதியினரே இவ்வாறு புதிதாகப் பிறந்த தங்களின் மகளுக்கு “சிங்கப்பூர்” என பெயரிட்டு, Love Aid Singapore அமைப்புக்கும் அந்நாட்டுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

காசா போர் பதற்றத்துக்கு மத்தியில் தொடர்ந்து உணவு வழங்கி உதவிய “லவ் எய்ட் சிங்கப்பூர்” என்கிற தொண்டு நிறுவனத்திற்கும், அந்த அமைப்பின் தாய்நாடான சிங்கப்பூருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரு பாலஸ்தீன தம்பதி, புதிதாகப் பிறந்த தங்களது மகளுக்கு “சிங்கப்பூர்” என்று பெயரிட்டுள்ளனர்.
சிங்கப்பூர் என்ற பெயரில் உள்ள முதல் பாலஸ்தீன பெண் குழந்தையும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |