வெறும் 9 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்! இதை மட்டும் செய்தால் போதும்
இந்தியாவில் சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என கூறப்படுகிறது, இதனால் நிறைய பேர் ஆப்பின் மூலமாக சிலிண்டர் புக் செய்ய தொடங்கி விட்டனர்.
இதற்கு காரணம் தங்களுக்கு ஏதும் ஆபர்கள் கிடைக்கும் என்பதே, தற்போது Paytm மூலம் புக் செய்தால் ரூ.800 வரை கேஸ்பேக் பெறலாம் என தெரிகிறது.

Paytm ஆப் மூலமாக முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும். இதற்கு, Paytm ஆப்பில் 'Book Cylinder' என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் உங்களது மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடி நம்பரைப் பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும். நுகர்வோரின் பெயர், சிலிண்டர் ஏஜென்சி பெயர், சிலிண்டரின் விலை போன்ற விவரங்களை நீங்கள் பார்த்து சிலிண்டரை புக் செய்யலாம்.
டெல்லியில் சிலிண்டர் விலை 809 ரூபாயாக இருக்கிறது. பேடிஎம் கேஷ் பேக் சலுகையில் சிலிண்டர் புக்கிங் செய்து 800 ரூபாய் கேஷ் பேக் கிடைத்தால் 9 ரூபாய்க்கு உங்களுக்கு சிலிண்டர் வாங்கலாம்.