நாவூறும் சுவையில் பூண்டு பரோட்டா செய்யலாம்.. 10 நிமிட ரெசிபி
நம்மிள் பலருக்கும் பூண்டு வாசனையுடன் உணவு செய்தால் மிகவும் பிடிக்கும். ஏனெனின் அதிலிருந்து வரும் வாசனை பசியை துண்டும்.
அதே சமயம் பூண்டை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளில் உள்ள ஊட்டசத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும்.
குழந்தைகளுக்கு பிடிக்காத போது அதனை மற்ற உணவுகளுடன் கலந்து தான் கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் குழந்தைகளுக்கு காலை உணவாக பூண்டு பரோட்டா செய்து கொடுக்கலாம். இது வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் உணவாக இருக்கும்.
அந்த வகையில், பூண்டு பரோட்டா 10 நிமிடங்களில் செய்வது எப்படி என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாவு - 3 கப்
- பூண்டு- நறுக்கியது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- வெண்ணெய் - தேவையிருந்தால்
- மிளகாய்- நறுக்கியது
- கருப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டி
- கரம் மசாலா - 2 அல்லது 3 தேக்கரண்டி
- செலரி- கொஞ்சம்
பூண்டு பரோட்டா செய்முறை
முதலில் பூண்டு பரோட்டாவிற்கு தேவையான அளவு பூண்டு பற்களை எடுத்து சுத்தம் செய்து, தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் பச்சை மிளகாய் இருந்தால் அதனையும் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பவுலில் போட்டு உப்பு, செலரி, கருப்பு மிளகு தூள் மற்றும் கரம் மசாலா ஆகிய பொருட்களை போட்டு பரோட்டாவிற்கு தேவையான ஸ்டஃபிங் தயார் செய்யவும்.
அதன் பின்னர், ஒரு கிண்ணத்தில் மூன்று கப் அளவு மா எடுத்து, அதில் உப்பு, செலரி மற்றும் கருப்பு மிளகு உள்ளிட்ட அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்க்கவும். அடுத்து பரோட்டா மா பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
10 நிமிடங்கள் தனியாக வைத்து, மாவின் மீது எண்ணெய் போட்டு தடவவும். பரோட்டா மாவை சிறிய உருண்டைகளாக்கி, எண்ணெய் போட்டு உருட்டிக் கொள்ளவும். தொடர்ந்து, அடுப்பை பற்ற வைத்து அதில் பரோட்டா கல்லை வைத்து பரோட்டாவை வேக வைக்கவும்.
பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுத்து பூண்டு பரோட்டா தயார்! இதனை சட்னி அல்லது ஊறுகாயுடன் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |